தமிழ்நாடு

கோவையில் கிரிக்கெட் திடல் என்பது நகைச்சுவை - அண்ணாமலை

Sasikumar

கோவையில் கிரிக்கெட் திடல் என்பது நகைச்சுவையாகக் கருதப்பட வேண்டியது என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், 2021 ஆம் ஆண்டு திமுக அளித்த 511 தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது என்பதை முதல்வர் ஸ்டாலினுக்கு நினைவூட்ட விரும்புகிறோம்.

தி.மு.க.வின் தேர்தல் வித்தைகளால் கோவையில் உள்ள இளைஞர்களையும், விளையாட்டு ஆர்வலர்களையும் ஏமாற்றிவிட முடியாது. கோவையில் கடந்த 3 ஆண்டுகளாக புதிய பேருந்து நிலையம் அமைக்க முடியாத கட்சி திமுக.

ஆனால் இன்று கோவையில் கிரிக்கெட் திடல் அமைக்கப்படும் என உறுதியளித்திருப்பது இந்த ஆண்டின் நகைச்சுவையாகக் கருதப்பட வேண்டியது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோவையில் சர்வதேச கிரிக்கெட் திடல் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவித்திருக்கும் நிலையில் அண்ணாமலை இவ்வாறு பதிலளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT