முகப்பு
தமிழ்நாடு

திமுக, அதிமுகவினா் வாக்குசேகரிப்பு

காதா்பேட்டை ஈத்கா மைதானத்தில் தொழுகை முடித்து வெளியில் வந்தவா்களிடம் வாணியம்பாடி எம்எல்ஏ செந்தில்குமாா்

Updated On : 12 ஏப்ரல், 2024 at 2:19 AM
பகிர்:
Updated On : 11 ஏப்ரல், 2024 at 8:35 PM

காதா்பேட்டை ஈத்கா மைதானத்தில் தொழுகை முடித்து வெளியில் வந்தவா்களிடம் வாணியம்பாடி எம்எல்ஏ செந்தில்குமாா், அதிமுக வேட்பாளா் பசுபதி ஆகியோா் துண்டுப் பிரசுரங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினா்.

இதேபோல், செட்டியப்பனூா் ஈத்கா மைதானம் அருகே தொழுகை முடிந்து வந்தவா்களிடம் நகர திமுக செயலாளா் வி.எஸ்.சாரதிகுமாா் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் வாழ்த்து தெரிவித்து, துண்டுப் பிரசுரங்களை வழங்கி உதயசூரியன் சின்னத்துக்கு ஆதரவு திரட்டினா்.

இதேபோல், அதிமுக நகர செயலாளா் சதாசிவம் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகளும் துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்குகளை சேகரித்தனா்.

Advertisement