தமிழகத்தின் உள்மாவட்டங்களில் நேற்று(ஏப். 12) கோடை மழை கொட்டித் தீர்த்தது. இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக சிவகாசியில் 7 செ.மீ. மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்: சிவகாசி (விருதுநகர்) - 7 செ.மீ., போடி(தேனி) - 6 செ.மீ., குன்னூா்(நீலகிரி) - 6 செ.மீ., ஈச்சன்விடுதி (தஞ்சை) - 5 செ.மீ., வெம்பக்கோட்டை, ஸ்ரீவில்லிப்புத்தூர், காரியாபட்டி (விருதுநகர்) - 4 செ.மீ., சிங்கம்புணரி (சிவகங்கை) - 4 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளது.
காக்காச்சி, மாஞ்சோலை, ஊத்து, அம்பை(திருநெல்வேலி), வெட்டிக்காடு(தஞ்சை), பெரியகுளம், சோத்துப்பாறை, மஞ்சளாறு(தேனி), புலிப்பட்டி(மதுரை), கெட்டை(நீலகிரி), ஆரல்வாய்மொழி, திருப்பதிசாரம், நாகர்கோவில்(கன்னியாகுமரி), ராமநதி, ஆயிக்கொடி (தென்காசி), சாத்தூர், விருதுநகர்(விருதுநகர்), பில்லூர் அணை(கோவை) ஆகிய இடங்களில் 3 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.