முகப்பு
தமிழ்நாடு

விஜய் பாடலுக்கு 'விசில் போட' ரெடி ஆ?

Updated On : 14 ஏப்ரல், 2024 at 9:11 AM
பகிர்:

கோட் படத்தின் முதல் பாடலான ‘விசில் போடு’ இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்திற்கு, கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் (G.O.A.T. - Greatest Of All Times) எனப் பெயரிட்ட அறிவிப்பு போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி, கேரளத்தில் படத்தின் படப்பிடிப்பு நிகழ்ந்தபோது தன் ரசிகர்களை விஜய் சந்தித்து எடுத்துக்கொண்ட விடியோ இணையத்தில் வைரலானது.

தற்போது இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இதன் புதிய போஸ்டர் வெளியாகியது. அதில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. இதனிடையே முதல் பாடலுக்கு தயாரா என போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது.

அதன்படி படத்தின் முதல் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என நேற்று புதிய அப்டேட் ஒன்று வெளியானது. அத்துடன் அந்த பாடலின் ப்ரோமோவும் வெளியிடப்பட்டது. மதன் கார்க்கி வரிகளில் யுவன் இசையில் ‘விசில் போடு’ எனத் தொடங்கும் அந்த பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசையில் நடிகர் விஜய் நடிக்கும் 2ஆவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →