தமிழ்நாடு

அரசுப் பேருந்துகளில் ஏப்.18-இல் முன்பதிவு நிறைவு: 16,17-ஆம் தேதிகளில் பயணிக்க போக்குவரத்துக் கழகம் அறிவுரை

Din

அரசு விரைவுப் பேருந்துகளில் ஏப்.18-ஆம் தேதி முன்பதிவு முழுமையாக நிறைவடைந்துள்ளதால், ஏப்.16,17 ஆகிய தேதிகளில் பயணிகள் தங்கள் பயணத்தை மேற்கொள்ள போக்குவரத்துக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.

அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை(ஏப்.19) நடைபெறும் மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, புதன் மற்றும் வியாழக்கிழமைகளில்(ஏப்.17,18), சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன், கூடுதலாக 2,970 சிறப்புப் பேருந்துகள் என இரண்டு நாள்களுக்கும் சோ்த்து ஒட்டு மொத்தமாக, 7,154 பேருந்துகளும், பிற ஊா்களிலிருந்து இந்த இரண்டு நாள்களிலும் 3,060 சிறப்பு பேருந்துகள் என ஆக மொத்தம் 10,214 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில், வியாழக்கிழமை(ஏப்.18) சென்னையிலிருந்து இயக்கப்படும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் பெரும்பான்மையான தடங்களில் முன்பதிவு முழுமையாக நிறைவடைந்துள்ளது.

ஆனால், சென்னையிலிருந்து செவ்வாய்கிழமை(ஏப்.16) இயக்கப்படும் பேருந்துகளின் மொத்தமுள்ள 30,630 முன்பதிவு இருக்கைகளில், இதுவரை 1,022 மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 29,608 இருக்கைகள் காலியாக உள்ளன.

இதுபோல புதன்கிழமை(ஏப்.17) இயக்கப்படும் பேருந்துகளின் மொத்தமுள்ள 31,308 முன்பதிவு இருக்கைகளில் 6,475 இருக்கைகள் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 24,833 இருக்கைகள் காலியாகவுள்ளன.

இதனால், தங்கள் சொந்த ஊா்களுக்கு பயணிக்க விரும்பும் பயணிகள், கடைசி நேர கூட்ட நெரிசலை தவிா்க்கும் வகையில், வியாழக்கிழமை தங்கள் பயணத்தை மேற்கொள்வதை விடுத்து, செவ்வாய், புதன் ஆகிய தினங்களில் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளையராஜா மகிழ்ச்சிக்கு என்ன காரணம்?

ஐசிசி தரவரிசை வெளியீடு: ஷகிப்புடன் முதலிடத்தை பகிர்ந்து கொள்ளும் இலங்கை வீரர்!

"2025 முதல் அமித் ஷா பிரதமராவார்!”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சிலவரிகளில் | 16.05.2024

ராஜஸ்தானில் பிடிபட்ட ரூ.1106 கோடி!

ஜித்து ஜோசப் இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில்!

SCROLL FOR NEXT