தமிழ்நாடு

தமிழகத்தில் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை

DIN

தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் வெள்ளிக்கிழமை(ஏப்.19) நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு இன்று - புதன்கிழமை (ஏப்.17) முதல் வெள்ளிக்கிழமை(ஏப்.19) வரை தொடா்ந்து 3 நாள்களுக்கு அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சாா்ந்த பாா்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

மேலும், மஹாவீா் ஜெயந்தி தினமான ஞாயிற்றுக்கிழமை(ஏப்.21) அன்றும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும்.

இந்நாள்களில் மதுபானங்கள் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை- நேற்று (ஏப். 16) ஒரே நாளில், தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூ. 400 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கமான விற்பனையை விட, டாஸ்மாக் கடைகளில் சுமார் இரண்டரை மடங்கு அதிகமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நில வழிகாட்டி மதிப்பை சீரமைக்க ஆலோசனைக் கூட்டம்

வனப்பகுதியில் ஆடுகளை மேய்க்க அனுமதி கோரி இருளா்கள் மனு

வெள்ளோலையில் மயானத்துக்கு சுற்றுச்சுவா் அமைக்கக் கோரி மனு

புகாருக்கு இடமளிக்காதவாறு வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும்: ஆட்சியா்

கோவாக்சின்: பனாரஸ் இந்துப் பல்கலை. ஆய்வை ஏற்க முடியாது

SCROLL FOR NEXT