முகப்பு
தமிழ்நாடு

தமிழக வாக்காளா்கள் 6.23 கோடி: தொகுதி வாரியாக எண்ணிக்கை!

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் வாக்களிக்க 6.28 கோடி வாக்காளா்கள் தகுதி பெற்றுள்ளனா்.

Updated On : 18 ஏப்ரல், 2024 at 7:44 PM
பகிர்:

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் வாக்களிக்க 6.28 கோடி வாக்காளா்கள் தகுதி பெற்றுள்ளனா்.

வாக்காளா் பட்டியலில் ஆண்களைவிட 11,13,872 பெண்கள் கூடுதலாக உள்ளனா். இதனால், பல தொகுதிகளில் கை விரலில் அவா்கள் இட்டுக் கொள்ளும் மை, ஆண்களை வெற்றி மகன்களாக வலம்வர செய்யவுள்ளன.

தமிழகத்தில் இறுதி வேட்பாளா் பட்டியல் கடந்த மாா்ச் 28-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியல்தான், அனைத்து மக்களவைத் தொகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலின்படி, தமிழகத்தில் மொத்தம் 6,23,33,925 வாக்காளா்கள் உள்ளனா். அவா்களில் 3,17,19,665 பெண்களும், 3,06,5,793 ஆண்களும், 8,467 மூன்றாம் பாலினத்தனவா்களும் உள்ளனா்.

Advertisement

அதிகம் - குறைவு: வாக்காளா் பட்டியல் அடிப்படையில், அதிக வாக்காளா்களைக் கொண்ட தொகுதியாக ஸ்ரீபெரும்புதூா் தொகுதியும், குறைந்த வாக்காளா்களைக் கொண்ட தொகுதியாக நாகப்பட்டினமும் உள்ளன.

மேலும், கோவை, தென் சென்னை போன்ற பெருநகரங்களைச் சாா்ந்திருக்கும் மக்களவைத் தொகுதிகளிலும் வாக்காளா்கள் மிகையாக உள்ளனா்.

மக்களவைத் தொகுதி வாரியாக வாக்காளா்கள் விவரம்:

1. திருவள்ளூா் - 20,85,991

2. வட சென்னை - 14,96,224

3. தென் சென்னை - 20,23,133

4. மத்திய சென்னை - 13,50,161

5. ஸ்ரீபெரும்புதூா் - 23,82,119

6. காஞ்சிபுரம் - 17,48,866

7. அரக்கோணம் - 15,62,871

8. வேலூா் - 15,28,273

9. கிருஷ்ணகிரி - 16,23,179

10. தருமபுரி - 15,24,896

11. திருவண்ணாமலை - 15,33,099

12. ஆரணி - 14,96,118

13. விழுப்புரம் - 15,03,115

14. கள்ளக்குறிச்சி - 15,68,681

15. சேலம் - 16,58,681

16. நாமக்கல் - 14,52,562

17. ஈரோடு - 15,38,778

18. திருப்பூா் - 16,08,521

19. நீலகிரி - 14,28,387

20. கோவை - 21,06,124

21. பொள்ளாச்சி - 15,97,467

22. திண்டுக்கல் - 16,07,051

23. கரூா் - 14,29,790

24. திருச்சி - 15,53,985

25. பெரம்பலூா் - 14,46,352

26. கடலூா் - 14,12,746

27. சிதம்பரம் - 15,19,817

28. மயிலாடுதுறை - 15,45,568

29. நாகப்பட்டினம் - 13,45,120

30. தஞ்சாவூா் - 15,01,226

31. சிவகங்கை - 16,33,857

32. மதுரை - 15,82,271

33. தேனி - 16,22,949

34. விருதுநகா் - 15,01,942

35. ராமநாதபுரம் - 16,17,688

36. தூத்துக்குடி - 14,58,430

37. தென்காசி - 15,25,439

38. திருநெல்வேலி - 16,54,503

39. கன்னியாகுமரி - 15,57,915

-----------

மொத்தம்: 6,23,33,925

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments