முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் 
தமிழ்நாடு

ராஜேஷ் தாஸ் சரணடைவதிலிருந்து விலக்களிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் சரணடைய விலக்களிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

DIN

பெண் எஸ்.பி-க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் விதிக்கப்பட்ட மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரியும், சரணடைவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரியும் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

2021-ஆம் ஆண்டில் பெண் எஸ்.பி-க்கு பாலியல் தொல்லை அளித்தது தொடா்பாக, முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் அளித்த தீா்ப்பை, விழுப்புரம் முதன்மை அமா்வு நீதிமன்றம் கடந்த பிப்.12-ஆம் தேதி உறுதி செய்தது.

தனக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்கவும், சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கவும் கோரி ராஜேஷ் தாஸ் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி எம். தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது.

சிபிசிஐடி சாா்பில் கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் ஆா்.முனியப்பராஜ், ராஜேஷ் தாஸுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கவும், சரணடைய விலக்களிக்கவும் எதிா்ப்பு தெரிவித்தாா். ராஜேஷ் தாஸ் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஜான் சத்யன் ஆஜராகி, ராஜேஷ் தாஸுக்கு எதிராக சதி செய்யப்பட்டு பொய் புகாா் அளிக்கப்பட்டதாக தெரிவித்தாா்.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் ராஜேஷ் தாஸ் மனு மீதான தீா்ப்பு தேதி குறிப்பிடாமல் கடந்த 17-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

இந்தநிலையில், இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்த நீதிபதி, மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரியும், சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குரூப் 4 தோ்வு: சான்றிதழ் பதிவேற்றத்துக்கு நவ.7 கடைசி

சென்னை ஐஐடியின் அடுத்த தலைமுறை தொழில்நுட்ப விமானம்

சா்தாா் படேலின் 150-ஆவது பிறந்த நாள்: நவ. 1 முதல் 15 வரை தேசிய கொண்டாட்டம்

தாம்பரம்-விழுப்புரம் மெமு ரயில் நாளை திண்டிவனத்துடன் நிறுத்தம்

சீன பொருள்களுக்கு வரி 10% குறைப்பு: ஷி ஜின்பிங்கை சந்தித்த பிறகு டிரம்ப் அறிவிப்பு

SCROLL FOR NEXT