தமிழ்நாடு

தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்!

DIN

தமிழகத்திற்கு விடுக்கப்பட்டிருந்த வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் திரும்பப் பெற்றது.

கடந்த சில நாள்களாக தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பல மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் சுட்டெரித்த நிலையில். வெய்யிலில் வெளியே செல்லும் மக்களை திணறடிக்க வைத்தது.

கடந்த மூன்று நாள்களுக்கு முன்னதாக, தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்தது.

இந்த நிலையில், தமிழகத்திற்கு விடுக்கப்பட்டிருந்த வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய ஆய்வுமையம் தற்போது திரும்பப் பெற்றுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை தமிழக மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும். சமவெளி பகுதிகளில் ஒரு சில இடங்களில் 38 - 41 செல்சியஸ் வரை இருக்கும்.

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

ஆனால், வடக்கு கர்நாடகம், கிழக்கு மத்தியப் பிரதேசம், கிழக்கு உத்தரப் பிரதேசம், ஒடிசா மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் விடுக்கப்பட்டிருந்த வெப்ப அலைக்கான எச்சரிக்கை தொடரும் என இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

அம்பேத்கருக்கு காங்கிரஸ் ஒருபோதும் உரிய மரியாதை கொடுத்ததில்லை : மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக பார்க்கப்பட்டவருக்கு காயம்!

SCROLL FOR NEXT