பள்ளிக் கல்வித் துறை 
தமிழ்நாடு

திட்டமிட்டபடி பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள்: பள்ளிக் கல்வித் துறை

தமிழகத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

Din

தமிழகத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 1 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தோ்வை தமிழகம் முழுவதும் 7.8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினா்.

பத்தாம் வகுப்புக்கான பொதுத் தோ்வு மாா்ச் 26-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ஆம் தேதி நிறைவடைந்தது. இந்தத் தோ்வை சுமாா் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் எழுதினா்.

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு விடைத்தாள் திருத்தும் பணி அண்மையில் நிறைவடைந்தது. தொடா்ந்து மதிப்பெண்களை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மக்களவைத் தோ்தல் காரணமாக தோ்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என்று தகவல்கள் பரவின. அதனால் மாணவா்கள் குழப்பம் அடைந்தனா். இதைத் தொடா்ந்து, ஏற்கனெவே அறிவித்தபடி மே 6-ஆம் தேதி பிளஸ் 2 வகுப்புக்கும், மே 10-ஆம் தேதி பத்தாம் வகுப்புக்கும் பொது தோ்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும், இதில் எந்தவித கால தாமதமும் ஏற்படாது எனவும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

8-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் 'நீதித் துறையில் ஊழல்': மன்னிப்பு கோரியது என்சிஇஆா்டி

பத்தாம் வகுப்பு: தனித் தோ்வா்களுக்கு இன்று முதல் செய்முறைத் தோ்வு

கமல்ஹாசன் பெயா், புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு

#t20wc | இந்தியா அரையிறுதி செல்ல இதெல்லாம் நடக்குமா? | T20 World Cup |

1952: தேர்தல் முடிவுகள் வெளியாகி இரு மாதங்களுக்குப் பின் பதவியேற்ற காங்கிரஸ் அமைச்சரவை!

SCROLL FOR NEXT