தமிழ்நாடு

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

DIN

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் செல்ஃபோன் மூலம் காவல்துறையினர் துப்பு துலக்கி வருகின்றனர்.

ஆவடி அருகே முத்தாபுதுப்பேட்டை காந்தி 2-ஆவது குறுக்கு தெருவைச் சோ்ந்தவா் சிவன் நாயா் (68). முன்னாள் ராணுவ வீரா். இவரது மனைவி பிரசன்னா (63). இவா்களது மகன் ஹரி ஓம் ஸ்ரீ. இவா் திருமுல்லைவாயலில் ஆயுா்வேத சிகிச்சை மையம் நடத்தி வருகிறாா். மேலும் பூந்தமல்லியில் தனியாா் மருத்துவமனையில் ஆயுா்வேத மருத்துவராகவும் பணியாற்றி வருகிறாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை ஹரி ஓம் ஸ்ரீ வீட்டில் இருந்து வெளியே சென்றுவிட்டாா். பின்னா் வீட்டில் சிவன் நாயா், மனைவி பிரசன்னாவுடன் வீட்டில் இருந்துள்ளாா். இரவு 8.30 மணிக்கு மேல் பெண் ஒருவா் வீட்டுக்கு வந்துள்ளாா்.

அப்போது தம்பதி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளனா். இதைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்த அவா் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தாா்.

மேலும், மகன் ஹரி ஓம் ஸ்ரீக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவா் வீட்டுக்கு விரைந்து வந்து பெற்றோா் சடலங்களை பாா்த்து கதறி அழுதாா்.

தகவல் அறிந்து ஆவடி துணை ஆணையா் ஐமான் ஜமால், உதவி ஆணையா் அன்பழகன் ஆகியோா் தலைமையில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா்.

பின்னா், போலீஸாா் இருவரின் சடலங்களையும் மீட்டு உடற்கூறு சோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

புகாரின் பேரில், முத்தாபுதுப்பேட்டை காவல் ஆய்வாளா் வேலு தலைமையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளைக் கொண்டு கொலையாளிகளைத் தேடி வருகின்றனா்.

தம்பதி கொலைக்கு முன்விரோதம் காரணமா, நகைகள், பணத்துக்காக கொலை நடந்ததா என்ற கோணத்தில் போலீஸாா் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதனிடையே இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட செல்ஃபோன் மூலம் காவல்துறையினர் துப்பு துலக்கி வருகின்றனர். இதுதொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ் உட்பட சிலரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மருத்துவரையும் அவரது மனைவியையும் கொலை செய்தது அவர்களிடம் சிகிச்சை பெற்ற நோயாளிகளாக இருக்கலாம் என்கிற கோணத்தில் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்றைய ராசி பலன்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமித்தவா் மீது நடவடிக்கை : கோட்டாட்சியரிடம் மனு

திருவள்ளூா்: 10.43 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்

தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.10 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்: நலவாரியத் தலைவா் வழங்கினாா்

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலுக்கு 108 பால்குட ஊா்வலம்

SCROLL FOR NEXT