கோப்புப்படம் 
தமிழ்நாடு

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் எப்போது நடைபெறும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

DIN

விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி (71) கடந்த ஏப்.6 ஆம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து சட்டப்பேரவை செயலகம் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியது.

மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலை நடத்த போதிய கால அவகாசம் தேவை என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஜூன் 1 ஆம் தேதி நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த தேர்தலுக்கான அறிவிப்பு மே 7 ஆம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகத்தரத்தில் கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையம்: முதல்வர் ஸ்டாலின்

பாலைவனம், சூரிய அஸ்தமனம், அமைதி... இனாயா சுல்தானா!

நிழலிலும் ஜொலிக்கற நிரந்தர ஒளி அவ... சான்யா மல்ஹோத்ரா!

53 கிலோ கோயில் நகைகள் ஸ்டேட் வங்கியில் முதலீடு!

டி20: தெ.ஆ. அணியை வீழ்த்தி வரலாறு படைத்தது நமீபியா..!

SCROLL FOR NEXT