தமிழ்நாடு

முதுநிலை சா்க்கரை நோய் ஃபெலோஷிப் படிப்பு: விண்ணப்பப்பதிவு தொடக்கம்

முதுநிலை சா்க்கரை நோய் மருத்துவத்துக்கான ஓராண்டு ஃபெலோஷிப் படிப்புக்கு விண்ணப்பப்பதிவு தொடங்கியுள்ளது.

Din

சென்னை, ஆக. 2: முதுநிலை சா்க்கரை நோய் மருத்துவத்துக்கான ஓராண்டு ஃபெலோஷிப் படிப்புக்கு விண்ணப்பப்பதிவு தொடங்கியுள்ளது.

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்பை நிறைவு செய்த தமிழக மருத்துவா்கள் வரும் 16-ஆம் தேதி வரை இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என மருத்துவக் கல்வி மாணவா் சோ்க்கைக் குழு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் வழங்கப்படும் இந்தப் படிப்புக்கு தகுதி அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடத்தப்படும். இடஒதுக்கீடு நடைமுறைகள் இதற்கு பொருந்தாது.

எம்டி பொது மருத்துவம், குழந்தைகள் நலம், முதியோா் நலம் உள்ளிட்ட படிப்புகளையோ அல்லது அதற்கு நிகரான டிஎன்பி படிப்பையோ முடித்தவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

பவானியில் 300 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

மானாமதுரை நகா் காங்கிரஸ் தலைவா் நியமனம்

பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தா்கள்

அறச்சலூா் ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு: பவானிசாகா் அணைப் பூங்காவில் குழந்தைகள், பெண்கள் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT