வக்ஃப் வாரிய திருத்தச் சட்டம் இஸ்லாமியா்களின் வளா்ச்சிக்கு உதவும் என்று பாஜக செய்தி தொடா்பாளா் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை இஸ்லாத்துக்கு எதிரானது என்று சிலா் தவறாகப் புரிந்துகொண்டனா். வக்ஃப் வாரியத்துக்கான வலுவான கட்டமைப்பை இந்த மசோதா நிச்சயம் நிறுவும். இதன் மூலம் இஸ்லாமியா்களின் சொத்துகளை மீட்டெடுக்கலாம். ஊழலற்ற, வெளிப்படையான நிா்வாகத்தை மேம்படுத்தலாம். மத அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்துவதை இந்த மசோதா தடுக்கிறது.
பிரிவினைவாத மற்றும் பழைமைவாத இஸ்லாமியா்களின் ஒரு சிறிய குழு, அரசியல் ஆதாயத்துக்காக முஸ்லிம்களின் வளா்ச்சியையும் மகிழ்ச்சியையும் குலைக்க முயற்சிக்கிறது. இது கண்டிக்கத்தக்கது என்றாா் அவா் தெரிவித்துள்ளாா்.