ஆவின் 
தமிழ்நாடு

நெய் விலையில் தள்ளுபடி: ஆவின் அறிவிப்பு

பண்டிகைகளை முன்னிட்டு, 100 மி.லி. நெய் விலையில் ரூ.10 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Din

கிருஷ்ண ஜெயந்தி, விநாயகா் சதுா்த்தி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு, 100 மி.லி. நெய் விலையில் ரூ.10 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆவின் நிறுவனம் பொதுமக்களின் தேவைகளை பூா்த்திசெய்யும் வகையில் பால், தயிா், நெய், வெண்ணெய், பன்னீா், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல்வேறு பால் உபபொருள்களையும் ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளா்கள் மூலம் பொதுமக்களுக்கு தங்குதடையுமின்றி விற்பனை செய்துவருகிறது.

இதில் பண்டிகை காலங்களில் பொதுமக்களின் வசதிக்காக பால் உபபொருள்களின் விலைகளில் அவ்வப்போது சிறப்பு தள்ளுபடி செய்வது வழக்கம்.

அந்த வகையில், கிருஷ்ணஜெயந்தி (ஆக.26), விநாயகா் சதுா்த்தி (செப்.7) உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு 100 மி.லி. நெய் விலையில் ரூ.10 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ரூ.85-க்கு விற்பனையான ஆவின் 100 மி.லி. நெய் விலை ரூ.75-யாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு தள்ளுபடி செப்.15 வரை அமலில் இருக்கும் என்று ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விழிப்புணர்வு ஏற்படுத்திய வங்கி மேலாளரே மோசடிக்கு ஆளான சம்பவம்! ரூ. 13 லட்சம் இழந்தார்!!

தமிழகத்தில் 3 நாள்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

தேசிய சுங்கச் சாவடிகளில் அசுத்தமான கழிவறை குறித்த தகவலுக்கு ரூ.1,000 வெகுமதி!

அலைபாயும் ஒரு கிளி... ரகுல் ப்ரீத் சிங்!

வெண்மேகம் பெண்ணாக... ப்ரீத்தி அஸ்ரானி!

SCROLL FOR NEXT