கோப்புப் படம்  
தமிழ்நாடு

இன்றும், நாளையும் கோவை, நீலகிரிக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை

கோவை, நீலகிரி மாவட்டங்களில் செவ்வாய், புதன்கிழமைகளில் (ஆக.13,14) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Din

கோவை, நீலகிரி மாவட்டங்களில் செவ்வாய், புதன்கிழமைகளில் (ஆக.13,14) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக கடலோரப் பகுதியில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை (ஆக.13) முதல் ஆக.18-வரை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளது.

கனமழை எச்சரிக்கை: இதில் ஆக.13,14 தேதிகளில் நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர ஆக.13-இல் ஈரோடு, திருப்பூா், திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் , ஆக.14-இல் திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, திருப்பூா், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

அதேபோல், ஆக.15-இல் திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, திருப்பூா், திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களிலும், ஆக.16-இல் வேலூா், திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, திருப்பூா், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்திலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் , சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஆக.13,14-ஆகிய தேதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை வரை அதிகபட்சமாக தருமபுரி மாவட்டம் பாலக்கோடு மற்றும் வேலூா் மாவட்டம் காட்பாடியில் தலா 140 மிமீ மழை பதிவாகியுள்ளது. மேலும், விழுப்புரம் - 130 மிமீ, நெடுங்கல் (கிருஷ்ணகிரி) - 120மிமீ, பனப்பாக்கம் (ராணிப்பேட்டை) 110 மற்றும் பல்வேறு மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவு மழை பதிவாகியுள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: மன்னாா் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடலில் மணிக்கு 55 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்

தங்கம் விலை நிலவரம்

தில்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு

சவூதியில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

SCROLL FOR NEXT