முகப்பு
தமிழ்நாடு

நெல்லை பேருந்துகளில் சாதி பாடல்கள்: காவல்துறை எச்சரிக்கை!

நெல்லை மாநகரப் பேருந்துகளில் சாதி பாடல்கள் ஒலிபரப்பக் கூடாது என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 16 ஆகஸ்ட், 2024 at 1:38 PM
கோப்புப்படம் - DIN
பகிர்:

நெல்லை பேருந்துகளில் சாதி பாடல்கள் ஒலிபரப்பக் கூடாது, மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் சாதி ரீதியான தாக்குதல் அதிகரித்து வருவதாக தொடர்ந்து செய்திகள் வருகின்றன. இதனைத் தடுக்க காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் காவல் துணை ஆணையர் வெங்கடேசன் தலைமையில் அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்களுடன்இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில்

Advertisement

அதில், பேருந்துகளில் சாதி ரீதியிலான பாடல்களை ஒலிபரப்பப் கூடாது என்றும் மீறினால் ஓட்டுநர், நடத்துனர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பேருந்துகளில் ஏதேனும் சிறியதாகபிரச்னைகள் இருந்தாலும் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.