முரசொலி மாறன் சிலைக்கு முதல்வா் ஸ்டாலின் மரியாதை 
தமிழ்நாடு

முரசொலி மாறன் சிலைக்கு முதல்வா் ஸ்டாலின் மரியாதை

Din

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சா் முரசொலி மாறனின் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை மரியாதை செலுத்தினாா்.

முரசொலி மாறனின் 91-ஆவது பிறந்த நாளையொட்டி, கோடம்பாக்கம் முரசொலி அலுவலக வளாகத்தில் உள்ள முரசொலி மாறன் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த படத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

பின்னா் முதல்வா் மு.க.ஸ்டாலின் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில், முரசொலி மாறனின் திராவிட இயக்கப் பயணத்தை இன்றைய தலைமுறையினருக்கும் எடுத்துச் சென்று அவருக்கு நன்றி செலுத்துவோம் என்று கூறியுள்ளாா்.

அமைச்சா்கள் துரைமுருகன், பொன்முடி, பி.கே.சேகா்பாபு, மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின், திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி ஆகியோரும் முரசொலி மாறன் சிலைக்கு மரியாதை செலுத்தினா்.

ஆஷஸ் தொடரில் தோல்வியே காணாத கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்..! சாதனை தொடருமா?

லெபனானில் பாலஸ்தீன அகதிகள் முகாமின் மீது இஸ்ரேல் தாக்குதல்! 13 பேர் பலி!

பிகார் காற்று தமிழகத்திலும் வீசுகிறது! - பிரதமர் மோடி பேச்சு

பூ போல புன்னகை தவழ... ஐஸ்வர்யா மேனன்!

சூர்யா - 47 படப்பிடிப்பு அப்டேட்!

SCROLL FOR NEXT