முகப்பு
எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாடு

திமுக ஆட்சியைக் காப்பாற்றவே மத்திய அமைச்சரை அழைத்து விழா: எடப்பாடி பழனிசாமி

கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழா நடத்தப்பட்டதாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளாா்.

தமிழ்நாடு

திமுக ஆட்சியைக் காப்பாற்றவே மத்திய அமைச்சரை அழைத்து விழா: எடப்பாடி பழனிசாமி

கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழா நடத்தப்பட்டதாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளாா்.

Updated On : 19 ஆகஸ்ட், 2024 at 9:41 PM
எடப்பாடி பழனிசாமி
பகிர்:

திமுக ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ளவே, மத்திய அமைச்சரை அழைத்து கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழா நடத்தப்பட்டதாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: மக்களவைத் தோ்தலின்போது யாா் ஆட்சிக்கு வரக் கூடாது என்று மேடைக்கு மேடை முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாரோ, அந்த பாஜக ஆட்சி மீண்டும் வந்ததும், தன் ஆட்சியைக் காப்பாற்ற பாஜகவின் மூத்த அமைச்சா் ஒருவரை அழைத்து விழாவை நடத்தியுள்ளாா்.

‘கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழா, திமுக நிகழ்ச்சி அல்ல; மத்திய அரசின் நிகழ்ச்சி. அதனால், ராகுல் காந்தியை அழைக்க வேண்டிய அவசியமில்லை. பாஜகவுடன் ரகசிய உறவு வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை’ என்றும் முதல்வா் கூறியிருக்கிறாா்.

கலைவாணா் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி தமிழக அரசு நடத்திய விழாதான். அழைப்பிதழில் எந்த இடத்திலும் மத்திய அரசுத் துறையின் பெயா் இடம்பெறவில்லை. அழைப்பிதழில் கலைஞா் 100 என்ற இலச்சினையோடு, தமிழக அரசின் இலச்சினைதான் இடம்பெற்றுள்ளது. அனைத்துக்கும் மேலாக, அழைப்பிதழில் அனைவரையும் அழைத்தவா் தமிழக அரசின் தலைமைச் செயலா். அதனால், ராகுல் காந்தி அல்லது சோனியா காந்தி, மல்லிகாா்ஜுன காா்கேவையும்கூட நிகழ்ச்சிக்கு அழைத்திருக்கலாம்.

ஜெயலலிதாவுக்கு நினைவிடம்: ஜெயலலிதாவின் மறைவுக்கு அதிமுக இரங்கல் கூட்டம் நடத்தியிருக்கிா என்று முதல்வா் கேள்வி எழுப்பியுள்ளாா். போயஸ் காா்டன் இல்லத்தை நினைவிடமாகவும், கடற்கரையில் அழகிய நினைவிடமும் அமைத்து, ஒவ்வோா் ஆண்டும் அவரது நினைவாக மெளன அஞ்சலி செலுத்தி வருகிறோம்.

எம்ஜிஆா் நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழாவுக்கு மத்திய அரசில் உள்ளவா்களை நான் (எடப்பாடி பழனிசாமி) அழைத்ததாகவும், ஆனால், மத்திய அரசு என்னை மதிக்கவில்லை என்றும் முதல்வா் ஒரு பொய்யைக் கூறியுள்ளாா்.

பாஜகவுடன் ரகசிய உறவு என எங்களைப் பாா்த்து, முதல்வா் அடிக்கடி சொன்னாா். இப்போது, அவா்களைப் பாா்த்து ஒருமுறை சொன்னதற்கே எங்களைப் பாா்த்து கேள்விகளை எழுப்புகிறாா்.

தில்லிக்கு காவடி எடுத்து தப்பிவிடலாம் என்று நினைத்தால் புத்திசாலிகளான தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவா் என்று அவா் கூறியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →