காங்கேசன்துறை - நாகை துறைமுகம் இடையே இயக்கப்படும் பயணிகள் கப்பல். 
தமிழ்நாடு

நாகை - இலங்கை இடையே வாரத்தில் 3 நாள்கள் மட்டும் கப்பல் போக்குவரத்து

நாகை - இலங்கை இடையே வாரத்தில் 3 நாள்கள் மட்டும் கப்பல் போக்குவரத்து இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

நாகப்பட்டினம்: நாகையிலிருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த வாரம் தொடங்கிய நிலையில் இனி வாரத்தில் 3 நாள்கள் மட்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாரத்தில், செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே நாகை - இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து இயக்கப்படும் என்றும், குறைந்த பயணிகள் முன்பதிவு செய்திருந்ததாலும், காலநிலை மாற்றத்தாலும், கப்பல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.

‘சிவகங்கை‘ என்ற பெயரில் புதிய பயணிகள் கப்பல் போக்குவரத்துத் தொடங்கப்பட்து. நாகை துறைமுகத்தில் இருந்து ஆகஸ்ட் 16ஆம் தேதி காலை 10 மணிக்கு புறப்பட்டு, காங்கேசன்துறைக்கு பிற்பகல் 2 மணிக்கு சென்றடைந்தது. கப்பல் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டு, ஆகஸ்ட் 17- ஆம் தேதி காலை 10 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு நாகையை வந்தது.

தொடா்ந்து 18-ஆம் தேதியிலிருந்து நாள்தோறும் நாகையிலிருந்து காலை 8 மணிக்கும், காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 2 மணிக்கும் கப்பல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வாரத்தில் மூன்று நாள்கள் மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கப்பலில் மொத்தமாக 123 சாதாரண இருக்கைகளும் 27 பிரீமியம் இருக்கைகளும் உள்ளன. ஜிஎஸ்டி வரியுடன் சாதாரண இருக்கைக்கு ரூ. 5 ஆயிரமும், பிரீமியம் இருக்கைக்கு ரூ. 7,500ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் 3 மணி நேரத்திற்கு முன்பே துறைமுகத்திற்கு வரவேண்டும், 23 கிலோ எடையிலான உடைமைகள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கப்பலில் பயணிக்க www.sailindsri.com என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனமழையால் பெருக்கெடுத்த வெள்ளம்! மரத்தைப் பிடித்து தப்பித்தவர்! | Philippines

இந்தியா - ஆஸி. போட்டி டிக்கெட் விற்பனை அமோகம்! 1,75,000 டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன!

நயினார் நாகேந்திரன் பிரசாரத்துக்கு காவல்துறை அனுமதி!

ராமதாஸுடன் இபிஎஸ் கூட்டணி பேச்சுவார்த்தை?

பிரேமலதா தாயார் காலமானார்!

SCROLL FOR NEXT