சென்னை பள்ளிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த திட்டம்!
சென்னையில் உள்ள 245 பள்ளிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த சென்னை மாநகராட்சி ரூ. 6.5 கோடி டெண்டர் கோரியுள்ளது.
சென்னையில் உள்ள 245 பள்ளிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த சென்னை மாநகராட்சி டெண்டர் கோரியுள்ளது.
அதன்படி, சென்னையில் உள்ள 245 பள்ளிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த சென்னை மாநகராட்சி ரூ.6.5 கோடி டெண்டர் கோரி இருக்கிறது.
கிருஷ்ணகிரியில் உள்ள பள்ளியில் சமீபத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம், குழந்தைகளின் பள்ளிச் சூழலின் பாதுகாப்பு குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளதால், சென்னை மாநகராட்சி இந்த நடவடிக்கை எடுக்க முடிவெடுத்துள்ளது.
Advertisement
Advertisement
மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பள்ளிகளை கண்காணிக்கவும், எதிர்காலத்தில் அசம்பாவிதங்களை தடுக்கவும் பள்ளி வளாகங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பள்ளிகளில் தரத்தை மேம்படுத்தவது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு கற்றலுக்கு ஏற்ற மேம்பட்ட சூழலில் மாணவர்களுக்கான பாதுகாப்பு சூழலை உருவாக்கக்கூடிய நோக்கத்திலும் பள்ளி வளாகத்தில் முழுமையாக கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்துவதற்கு சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.