தமிழ்நாடு

சென்னை மக்கள் கவனத்திற்கு: 11 மின்சார ரயில்கள் இன்றிரவு ரத்து!

சென்னை கடற்கரை - தாம்பரம் செல்லும் 6 ரயில்கள் ரத்து

DIN

சென்னை கடற்கரை ரயில் நிலையம் - தாம்பரம் இடையே இயக்கப்படும் 6 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதன் விவரம் பின்வருமாறு,

  • சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து இன்றிரவு 9.10, 9.30 மணிக்கு தாம்பரத்திற்கு புறப்படும் புறநகர் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து.

    மறுமார்க்கத்தில், இன்றிரவு தாம்பரத்திலிருந்து 10.40, 11.20, 11.40 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு புறப்படும் புறநகர் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து.

  • சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து இன்றிரவு 7.50 மணிக்கு திருவள்ளூருக்கு புறப்படும் புறநகர் மின்சார ரயில் முழுமையாக ரத்து.

    மறுமார்க்கத்தில், இன்றிரவு 9.35 மணிக்கு திருவள்ளூரிலிருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு புறப்படும் புறநகர் மின்சார ரயில் முழுமையாக ரத்து.

  • சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து இன்றிரவு 9.20 மணிக்கு கும்மிடிப்பூண்டிக்கு புறப்படும் புறநகர் மின்சார ரயில் முழுமையாக ரத்து.

    மறுமார்க்கத்தில், இன்றிரவு 9.55 மணிக்கு கும்மிடிப்பூண்டியிலிருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு புறப்படும் புறநகர் மின்சார ரயில் முழுமையாக ரத்து.

நாளை(ஆக. 25)

  • அதிகாலை 4.15 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரத்திற்கு புறப்படும் புறநகர் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து.

  • அதிகாலை 4.05 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து அரக்கோணத்திற்கு புறப்படும் புறநகர் மின்சார ரயில் முழுமையாக ரத்து.

எழும்பூர் - சென்னை கடற்கரை இடையே ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்கள் விவரம்:

செங்கல்பட்டிலிருந்து இன்றிரவு 8.45, 9.10, 10.10, 11 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு புறப்படும் புறநகர் மின்சார ரயில்கள், எழும்பூர் - சென்னை கடற்கரை இடையே பகுதியளவில் ரத்து.

திருமால்பூரிலிருந்து இன்றிரவு 8 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு புறப்படும் புறநகர் மின்சார ரயில்கள், எழும்பூர் - சென்னை கடற்கரை இடையே பகுதியளவில் ரத்து.

சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து இன்றிரவு 10.40 மணிக்கு, நாளை அதிகாலை 3.55 மணிக்கு செங்கல்பட்டுக்கு புறப்படும் புறநகர் மின்சார ரயில்கள், சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே பகுதியளவில் ரத்து. மேற்கண்ட ரயில்கள் எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்.

சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து இன்றிரவு 11.05, 11.30, 11.59 மணிக்கு தாம்பரத்திற்கு புறப்படும் புறநகர் மின்சார ரயில்கள், சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே பகுதியளவில் ரத்து.மேற்கண்ட ரயில்கள் எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT