காரில் அழைத்துச் செல்லப்பட்ட சண்முக பாண்டியன். 
தமிழ்நாடு

விஜயகாந்தின் மகன் திடீர் மயக்கம்

சென்னை தேமுதிக தலைமை அலுவலகத்தில், விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் திடீரென மயக்கமடைந்ததால் பரபரப்பு நிலவியது.

DIN

சென்னை தேமுதிக தலைமை அலுவலகத்தில், விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் திடீரென மயக்கமடைந்ததால் பரபரப்பு நிலவியது.

கூட்ட நெரிசல் காரணமாக மயக்கமடைந்ததாகவும், இருப்பினும் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு காரில் அழைத்துச் செல்லப்பட்டார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

தேமுதிக நிறுவனரும், தமிழக சட்டப்பேரவை முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான மறைந்த விஜயகாந்தின் 72வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி தேமுதிக தலைமை அலுவலகத்தில் சிலை திறப்பு விழா நடைபெற்றது. விழவில் கட்சியின் பொதுச்செயலர் பிரேமலதா, விஜயகாந்த் சிலையை திறந்துவைத்தார்.

இதனால் தேமுதிக அலுவலகத்தில் காலை முதலே திரைப் பிரபலங்கள், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான கட்சித் தொண்டர்கள் குவிந்தனர்.

இந்த நிலையில் சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற சண்முக பாண்டியன் திடீரென மயங்கி விழுந்ததால் அங்கு பரபரப்பு காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடகிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சி!

தில்லியில் காற்றின் தரம் கடந்த 7 ஆண்டுகளைவிட மேம்பட்டுள்ளது: அரசு அறிக்கை வெளியீடு

மிடில் கிளாஸ் டீசர்!

உலகக் கோப்பை வென்ற இந்திய அணியினரைச் சந்திக்கும் பிரதமர் மோடி!

உசே கெனா விடியோ பாடல் வெளியானது!

SCROLL FOR NEXT