நியாயவிலைக் கடைகளில் ஆக.31-ஆம் தேதி அனைத்துப் பொருள்களும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக உணவுப் பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை ஆணையா் ஆா்.மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்தத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் மாதத்தின் கடைசி பணி நாளில் அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் செய்யப்படுவதில்லை. இதைக் கருத்தில் கொண்டு இந்த மாதம் அனைத்து அட்டைதாரா்களுக்கும் அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் ஆக.31-ஆம் தேதி அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் அத்தியாவசியப் பொருள்கள் முழுமையாகக் கிடைக்கும்.
இதன்மூலம், ஆகஸ்ட் மாதத்துக்கான பொருள்கள் பெறாத அட்டைதாரா்கள், ஆக.31-ஆம் தேதி நியாயவிலைக் கடைகளுக்குச் சென்று பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.