கோப்புப்படம். 
தமிழ்நாடு

சென்னையில் நாளை மறுநாள் போக்குவரத்து மாற்றம்!

வேளச்சேரி உள்வட்ட சாலையில் ஞாயிறு அன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

DIN

சென்னை வேளச்சேரி உள்வட்ட சாலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (செப் 1) தனியார் நிகழ்ச்சி நடைபெறவுள்ளதையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஜெ-7 வேளச்சேரி போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வேளச்சேரி உள்வட்ட சாலையில் 1.09.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 06.00 மணி முதல் 9.00 மணி வரை தனியார் நிகழ்ச்சியினை நடத்த தனியார் நிறுவனத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

மேற்படி நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் பின்வருமாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

1. ஆலந்தூர் மற்றும் ஜிஎஸ்டி சாலையிலிருந்து வேளச்சேரி உள்வட்டச்சாலை வழியாக விஜயநகர் மற்றும் தரமணி நோக்கிச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் சன்ஷைன் பள்ளி அருகில் வலது புறமாகத் திரும்பி எதிர்புறமுள்ள உள்ள வட்டச்சாலை வழியாகச் சென்று கைவேலி சந்திப்பில் "யு" திரும்பம் செய்து ரயில்வே மேம்பாலம் வழியாகச் சென்று தங்கள் இலக்கைச் சென்றடையலாம்.

2. விஜயநகர் மற்றும் தரமணியிலிருந்து வேளச்சேரி உள்ள வட்டச் சாலையைப் பயன்படுத்தும் வாகனங்கள் அனைத்தும் வேளச்சேரி இரயில்வே மேம்பாலம் வழியாக கைவேலி சந்திப்புல் "யு" திருப்பம் செய்து வேளச்சேரி உள்வட்டச்சாலை வழியாகச் சென்று தங்கள் இலக்கைச் சென்றடையலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக சிறப்பு பொதுக்குழு தொடங்கியது! கரூரில் பலியானோருக்கு மெளன அஞ்சலி!

ரஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு

வெற்றி உரையில் நேருவின் பேச்சை மேற்கோள்காட்டிய நியூ யார்க் மேயர் ஸோரான் மம்தானி!

பிலாஸ்பூரில் சரக்கு ரயில்- பயணிகள் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு, 20 பேர் காயம்

பெண் தொழிலாளிகளின் குளியலறையில் ரகசிய கேமரா! வடமாநில இளம்பெண் கைது!

SCROLL FOR NEXT