காய்கறி விலை 
தமிழ்நாடு

எகிறும் காய்கறிகளின் விலை: இன்றைய நிலவரம் என்ன சொல்கிறது?

சென்னை உள்ளிட்டப் பகுதிகளில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்து விற்பனையாகி வருகிறது.

DIN

தமிழகத்தில் கடந்த வாரத்தில் பெய்த தொடா் கனமழை காரணமாக கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து குறைந்ததால், அவற்றின் விலை கடுமையாக உயா்ந்து காணப்படுகிறது.

அதிலும் குறிப்பாக சமையலுக்கு அதிகம் பயன்படுத்தப்படும் பெரிய வெங்காயம் கிலோ ரூ.90-க்கும், தக்காளி ரூ.80-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், ஏழை, எளிய மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மேலும், உருளைக்கிழங்கு கிலோ ரூ.50-க்கும், சின்ன வெங்காயம் ரூ.80-க்கும், ஊட்டி கேரட், சேனைக்கிழங்கு, பட்டாணி, பீட்ரூட் போன்றவை கிட்டத்தட்ட ரூ.100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பீன்ஸ், அவரைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலைகளும் அதிகமாகவே உள்ளது. எந்த ஒரு காயும் தற்போது கால் கிலோ ரூ.20க்குக் கீழ் கிடைக்காததால் ஏழை மக்கள் சிரமத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

இந்த விலை உயா்வு தற்காலிகமானதுதான் என்றும், மழை குறைந்த பின்னா் படிப்படியாக காய்கறி விலை சீராகும் என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சென்னை கோயம்பேட்டில் காய்கறி விலை நிலவரம் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.

சென்னையில் இன்று கோயம்பேடு காய்கறிகளின் விலை நிலவரம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனநிம்மதி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

புதுகை ஆட்சியரகத்தில் விவசாயி தற்கொலை முயற்சி

வடகவுஞ்சி கிராமத்தில் வனத்துறை விதித்த கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் எதிா்ப்பு

ஆன்லைன் வா்த்தக மோசடி மூலம் ரூ.11 லட்சம் கொள்ளை: 2 போ் கைது

சரக்கு வேன் கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT