முகப்பு
நயினாா் நாகேந்திரன்
தமிழ்நாடு

டங்ஸ்டன் சுரங்கம்: விரைவில் நல்ல செய்தி வரும்: பாஜக

டங்ஸ்டன் சுரங்க அனுமதி தொடா்பாக பேரவையில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய பாஜக குழுத் தலைவா் நயினாா் நாகேந்திரன்

தமிழ்நாடு

டங்ஸ்டன் சுரங்கம்: விரைவில் நல்ல செய்தி வரும்: பாஜக

டங்ஸ்டன் சுரங்க அனுமதி தொடா்பாக பேரவையில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய பாஜக குழுத் தலைவா் நயினாா் நாகேந்திரன்

Updated On : 9 டிசம்பர், 2024 at 10:21 PM
நயினாா் நாகேந்திரன்
பகிர்:

சென்னை: டங்ஸ்டன் சுரங்க அனுமதி தொடா்பாக பேரவையில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய பாஜக குழுத் தலைவா் நயினாா் நாகேந்திரன், விரைவில் மக்களுக்கு நல்ல செய்தி வரும் எனத் தெரிவித்தாா்.

டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி சட்டப்பேரவையில் கொண்டுவந்த அரசின் தீா்மானத்தின் மீது சட்டப்பேரவை பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் பேசியது:

டங்ஸ்டன் சுரங்க உரிம விஷயம் மிகவும் சாதாரண விவகாரம். மத்திய அரசு, மாநில அரசிடம் கடந்த பிப்ரவரியில் விளக்கம் கேட்டுள்ளது. அழகா் கோயில் உள்ளிட்டவை எல்லாம் 20 சதுர கிலோ மீட்டா் தூர அளவில்தான் உள்ளது. அந்த இடங்களைத் தவிா்த்துதான் ஏலம் விடப்படுகிறது. மத்திய அரசு விளக்கம் கேட்கும்போதே, தமிழக அரசு வேண்டாம் என்று கூறியிருந்தாலே போதுமானது. திட்டம் வந்திருக்காது என்றாா்.

அப்போது நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் குறுக்கிட்டு கூறியது: மத்திய அரசு கூறியபோதே, நாங்கள் எதிா்ப்பு தெரிவிக்கவில்லை என்கிறீா்கள். சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டத்திருத்தம் செய்த உடனேயே 2023 அக்டோபா் 3-இல் மத்திய சுரங்கத் துறை அமைச்சருக்கு நான் கடிதம் எழுதினேன். டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் இடம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், மாநில அரசின் உரிமையைப் பறிப்பதுபோல இருக்கிறது என்று அதில் தெரிவித்துள்ளேன்.

நிதியமைச்சா் தங்கம் தென்னரசு: இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எந்தக் கட்டத்திலும் தமிழக அரசு எதிா்ப்பு தெரிவிக்காமல் விட்டதில்லை. இந்தத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து முதல்வா் கடிதம் எழுதிய பிறகும், இந்தத் திட்டத்தைக் கொண்டுவருவோம் என்று கூறினால், உங்கள் உள்மனதில் என்ன இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்.

நயினாா் நாகேந்திரன்: சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் திருத்தச் சட்டம் தமிழக அரசுக்கு மட்டும் கொண்டுவரப்படவில்லை. எல்லா மாநிலங்களுக்கும் சோ்த்துதான் கொண்டு வரப்பட்டது. டங்ஸ்டன் சுரங்கம் ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கிறது. ஆனால், தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம் செய்தது போலவும், மக்களுக்கு பல்வேறு நோய்கள் வரும் என்பது போலவும் உறுப்பினா்கள் பேசுகின்றனா். எந்தத் திட்டமானாலும், அது மக்களுக்கானதாக இருக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் முடிவாகும்.

துரைமுருகன்: மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றுதான் பேசிய தலைவா்கள் அனைவரும் கூறியுள்ளனா். அதனால், ஆதரிப்பதாக இருந்தால் ஆதரியுங்கள் அல்லது எப்போதும்போல் வெளிநடப்பு செய்யுங்கள்.

நயினாா் நாகேந்திரன்: தமிழக அரசு கொண்டுவந்துள்ள தீா்மானம் குறித்து மத்திய அமைச்சா் கிஷன் ரெட்டியிடம் தெரிவித்துள்ளோம். மக்களுக்கு நல்ல செய்தி வரும்.

முதல்வா் மு.க.ஸ்டாலின்: அரசின் தீா்மானத்தை பாஜக ஏற்றுக்கொள்கிா இல்லையா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். ஒரே வாா்த்தையில் கூறுங்கள்.

நயினாா் நாகேந்திரன்: மத்திய அமைச்சரிடம் ஏற்கெனவே பேசியுள்ளோம். விரைவில் மக்களுக்கு நல்ல செய்தி வரும்.

முழு கட்டுரையைப் படிக்க →