மகாகவி பாரதியாரின் பிறந்தநாளையொட்டி சென்னை காமராஜர் சாலையில் உள்ள பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை.  
தமிழ்நாடு

உயர்தமிழுக்குப் புதுநெறி காட்டிய புலவன் பாரதி: முதல்வர் மு.க.ஸ்டாலின்

மகாகவி பாரதியாரின் பிறந்தநாளையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவு...

DIN

மகாகவி பாரதியாரின் பிறந்தநாளையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரை நினைவுகூர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

"உய்வகை காட்டும் உயர்தமிழுக்குப் புதுநெறி காட்டிய புலவன்!

தமிழ்க்கவியில், உரைநடையில், தனிப்புதுமை படைத்த செந்தமிழ்த் தேனீ மகாகவி பாரதியாரின் பிறந்தநாளில் அவரை வணங்குகிறேன்!

மொழி - நாடு - பெண் விடுதலை - பிற்போக்குத்தனங்கள் எதிர்ப்பு எனத் தமிழுக்கும் தமிழ்ச் சமூகத்துக்கும் இந்தியத் திருநாட்டின் விடுதலைக்கும் தொண்டு செய்த பாரதி வாழிய!" என்று பதிவிட்டுள்ளார்.

மகாகவி பாரதியாரின் பிறந்தநாளையொட்டி தமிழக அரசு சார்பில் சென்னை மெரீனா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா மற்றும் அதிகாரிகள் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இயற்கை காத்தோர் எம்சங்க மூத்தோர்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

எச்-1பி விசா: புதிய விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே கட்டண உயர்வு - அமெரிக்கா விளக்கம்

சொல்லப் போனால்... உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே!

எதிர்ப்புகள் நீங்கும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT