முகப்பு
தமிழ்நாடு

ரயிலில் துணி உறையுடன் கம்பளிப் போர்வை!

ரயிலில் துணி உறையுடன் கம்பளிப் போர்வை வழங்கும் திட்டம் முதன் முதலில் மதுரை - சென்னை செல்லும் பாண்டியன் விரைவு ரயில் பயணிகளுக்கு வழங்கப்பட்டது.

Updated On : 11 டிசம்பர், 2024 at 10:09 PM
துணி உறையுடன் கூடிய கம்பளி போர்வை
பகிர்:
Updated On : 11 டிசம்பர், 2024 at 10:00 PM

ரயிலில் துணி உறையுடன் கம்பளிப் போர்வை வழங்கும் திட்டம் முதன் முதலில் மதுரை - சென்னை செல்லும் பாண்டியன் விரைவு ரயில் பயணிகளுக்கு வழங்கப்பட்டது.

Updated On : 11 டிசம்பர், 2024 at 10:02 PM

ரயில்களில் குளிர்சாதனப் பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இரண்டு படுக்கை விரிப்புகள், தலையணை, தலையணை உறை, கம்பளிப் போர்வை, கைத்துண்டு வழங்கப்பட்டு வருகின்றன.

இதில் கம்பளிப் போர்வை, தலையணை தவிர மற்ற படுக்கை துணிகள் ஒவ்வொரு உபயோகத்திற்கு பிறகும் தூய்மையாக சலவை செய்து வழங்கப் படுகிறது. கம்பளி போர்வை மட்டும் 15 நாட்கள் அல்லது 30 நாட்களுக்கு ஒரு முறை உலர் சலவை செய்யப்படுகிறது.

Advertisement

இது தொடர்பாக பயணிகள் பல்வேறு கருத்துகளையும் ஆலோசனைகளையும் தெரிவித்த நிலையில், பயணிகளுக்கு தூய்மையான கம்பளிப் போர்வை வழங்குவதற்கு தெற்கு ரயில்வே சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

Updated On : 11 டிசம்பர், 2024 at 10:05 PM

இதன்படி, முதன்முறையாக மதுரை கோட்டத்தில் உள்ள பாண்டியன் விரைவு ரயிலில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

துணி உறைகள், கம்பளிப் போர்வை உள்ளிட்டவை முறைப்படி (வெல்கிரோ ஒட்டும் முறை) ஒட்டி வெளியே வராமல் பாதுகாக்கப்படுகிறது‌. இதன் மூலம் கம்பளிப் போர்வையை சுகாதாரமாக பாதுகாத்து தொடர்ந்து உபயோகப்படுத்த முடியும்.

இதையும் படிக்க | புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.