செம்பரம்பாக்கம் ஏரியை நேரில் பாா்வையிட்டு ஆய்வு நடத்திய அமைச்சா்கள் துரைமுருகன், தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர். 
தமிழ்நாடு

ஆரஞ்சோ, ஆப்பிளோ.. செம்பரம்பாக்கம் ஏரி தாங்கும்: அமைச்சர் துரைமுருகன்

ஆரஞ்சோ, ஆப்பிளோ எதுவாக இருந்தாலும் செம்பரம்பாக்கம் ஏரி தாங்கும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

DIN

ஆரஞ்சு போட்டாலும் சரி, ஆப்பிள் போட்டாலும் சரி செம்பரம்பாக்கம் ஏரி தாங்கும் என்று ஏரியை ஆய்வு செய்தபின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கிண்டலாகக் கூறினார்.

தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. இந்த நிலையில் முன்னெச்சரிக்கையாக, ஆயிரம் கன அடியில் இருந்து உபரி நீர் திறப்பு, தொடங்கி 6 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டது.

பின்னர் நீர்வரத்து குறைந்ததன் காரணமாக தற்போது 3 ஆயிரம் கன அடி உபநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று செம்பரம்பாக்கம் ஏரியில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது செம்பரம்பாக்கம் ஏரிக்கு எந்தெந்த பகுதிகளில் இருந்து நீர் வருகிறது. உபரி நீர் திறந்து விடப்பட்டால் எந்தெந்த பகுதி வழியாக அடையார் ஆற்றில் கலக்கிறது என்பது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அவரிடம் விளக்கி காண்பித்தனர்.

உடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், எம்.எல்.ஏ. செல்வ பெருந்தகை ஆகியோர் இருந்தனர்.

பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, மழை இல்லை என்று யார் சொன்னது. ஆரஞ்சு போட்டாலும் சரி, ஆப்பிள் போட்டாலும் சரி செம்பரம்பாக்கம் ஏரி தாங்கும். எந்த குறையும் நான் சொல்ல விரும்பவில்லை குறைகள் இருந்தால் நிவர்த்தி செய்யப்படும்.

அதிமுக எங்களை பாராட்டியா தீர்மானம் போடுவார்கள்? அப்படிப் போட்டால் தான் எதிர்க்கட்சி. அப்படி போட வில்லை என்றால் நானே கேட்பேன்.. என்ன எதிர்க்கட்சி என்று?

நீர்வளத் துறைக்கு மட்டும் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளது. ஒரு பக்கம் தூர் வாரினால் ஒரு பக்கம் நின்று விடுகிறது. எல்லாவற்றையும் தூர்வார நிதி ஆதாரம் கொடுக்கவில்லை, கேட்டு கொண்டிருக்கிறோம். அனைத்தையும் தூர்வாருவது ஒரே நேரத்தில் முடியாத காரியம்.

பொதுவாகவே நமது சமுதாயத்தில் பெரிய பிரச்சனை உள்ளது. எதுவாக இருந்தாலும் ஏரி, கால்வாயில் கொட்டி விடுகிறார்கள். வட ஆற்காடு மாவட்டத்தில் வாணியம்பாடி பகுதிகளில் பாலாறு அடைப்பு ஏற்பட்டு விட்டது. மக்களுக்கு விழிப்புணர்வு வரவேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி அரசுக்கு எதிராக அணிதிரண்ட பெற்றோர்கள்: சட்டப்பேரவை முற்றுகை போராட்டம்!

கூலி படத்தில் சாட்ஜிபிடி உதவியால் பாடலை முடித்த அனிருத்!

பார்வை போதும்... ஃபெளசி!

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேற ரஷியா முடிவு?

விழியிரண்டும்... ராஷி சிங்!

SCROLL FOR NEXT