செஸ் விளையாட்டில் தமிழ்நாட்டுக்கு முக்கிய இடம்: விஸ்வநாதன் ஆனந்த்
உலக அளவில் செஸ் விளையாட்டில் தமிழ்நாடு முக்கிய இடம் பெற்றுள்ளதாக செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் புகழாரம் சூட்டினார்.
உலக அளவில் செஸ் விளையாட்டில் தமிழ்நாடு முக்கிய இடம் பெற்றுள்ளதாக கிராண்ட் மாஸ்டரும் 5 முறை செஸ் சாம்பியன்ஷிப் வென்றவருமான விஸ்வநாதன் ஆனந்த் புகழாரம் சூட்டினார்.
இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற டி.குகேஷுக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இதில் விஸ்வநாதன் ஆனந்த் பேசியதாவது,
நாட்டின் முதல் சர்வதேச செஸ் மாஸ்டர், கிராண்ட் மாஸ்டர், பெண் கிராண்ட் மாஸ்டர் என எல்லோரும் தமிழ்நாட்டில்தான் உள்ளனர்.
34 ஆண்டுகளுக்கு முன்பு நான் வெற்றி பெற்ற தருணத்தில் கருணாநிதி பாராட்டு விழா நடத்தினார்.