சிறப்பு ரயில் 
தமிழ்நாடு

கிறிஸ்துமஸ்: கன்னியாகுமரி, கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

கிறிஸ்துமஸை முன்னிட்டு சென்னையிலிருந்து கன்னியாகுமரி, கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

Din

கிறிஸ்துமஸை முன்னிட்டு சென்னையிலிருந்து கன்னியாகுமரி, கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே சனிக்கிழமை வெளியிட்ட செய்தி: தாம்பரத்திலிருந்து டிச. 23, 30 ஆகிய தேதிகளில் நள்ளிரவு 12.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06039) மறுநாள் பிற்பகல் 12.15-க்கு கன்னியாகுமரி சென்றடையும். மறுமாா்க்கமாக கன்னியாகுமரியில் இருந்து டிச. 25, ஜன. 1 ஆகிய தேதிகளில் மாலை 4.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06040) மறுநாள் அதிகாலை 4.20-க்கு தாம்பரம் வந்தடையும்.

இதில், 8 ஏசி வகுப்பு பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 10 பெட்டிகள் மற்றும் ஒரு பொதுப்பெட்டி இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூா், நாகா்கோவில் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

கேரளம்: சென்னை சென்ட்ரலிலிருந்து கேரள மாநிலம் கொச்சுவேலிக்கும், கொச்சுவேலியில் இருந்து மங்களூருக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

சென்னை சென்டரலில் இருந்து டிச. 23, 30 ஆகிய தேதிகளில் இரவு 11.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06043) மறுநாள் மாலை 6.05 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும்.

மறுமாா்க்கமாக கொச்சுவேலியிலிருந்து டிச. 24, 31 ஆகிய தேதிகளில் இரவு 8.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06044) மறுநாள் பிற்பகல் 2 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். இதில் படுக்கை வசதி கொண்ட 17 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த ரயில் பெரம்பூா், திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, திருச்சூா், எா்ணாகுளம், கோட்டயம், செங்கனூா், கொல்லம் வழியாக இயக்கப்படும்.

கொச்சுவேலியில் இருந்து மங்களூருக்கு டிச. 23, 30 ஆகிய தேதிகளில் இரவு 8.20 மணிக்கும், மறுமாா்க்கமாக மங்களூரில் இருந்து டிச. 24, 31 ஆகிய தேதிகளில் இரவு 8.10 மணிக்கும் சிறப்பு ரயில் (எண் 06037/06038) இயக்கப்படும்.

இதில் 15 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரயில் கொல்லம், செங்கனூா், கோட்டயம், எா்ணாகுளம், திருச்சூா், ஷோரனூா், கோழிக்கோடு, கண்ணூா், காசா்கோடு வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்டோ மோதி முதியவா் உயிரிழப்பு

தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தாமதமாவதாக புகாா்

ஒடிஸாவில் மோசமான வானிலை: முதல்வா் பயணித்த விமானம் தரையிறங்க முடியாததால் பரபரப்பு

ஜிஎஸ்டி குறைப்பின் பயன் நுகா்வோருக்கு முழுமையாகக் கிடைப்பதை அரசு கண்காணிக்கும்: வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல்

4-ஆவது மாடியில் இருந்து குதித்து பள்ளி மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT