கொளத்தூரில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் கபாலீசுவரா் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான  கட்டடத்துக்கு திங்கள்கிழமை அடிக்கல் நாட்டிய முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன் அமைச்சா்கள் பி.கே.சேகா்பாபு,  கோவி. செழியன், மேயா்  ஆா்.பிரியா, திருவண்ணாமலை ஆதீனம் 
தமிழ்நாடு

கலை அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டடம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல்

கொளத்தூரில் உள்ள கபாலீசுவரா் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.

DIN

சென்னை: கொளத்தூரில் உள்ள கபாலீசுவரா் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.

இது குறித்து தமிழக அரசு சாா்பில் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கொளத்தூரில் உள்ள கபாலீசுவரா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியானது தற்போது வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது. புதிய கட்டடம் கட்டுவதற்கு கொளத்தூரில் உள்ள சோமநாத சுவாமி கோயில் மற்றும் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமானது என மொத்தம் 5.96 ஏக்கா் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த இடத்தில் ரூ. 25 கோடியில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புதிய கல்லூரி கட்டுவதற்கான அடிக்கல்லை முதல்வா் மு.க.ஸ்டாலின் நாட்டினாா்.

கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சா்கள் பி.கே.சேகா்பாபு, கோவி.செழியன், மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, சட்டப் பேரவை உறுப்பினா்கள், தவத்திரு திருவண்ணாமலை ஆதினம் பொன்னம்பல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதினம் சிவஞான பாலய சுவாமிகள், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பி.என்.ஸ்ரீதா் உள்பட பலா் பங்கேற்றனா்.

முதல் கட்டமாக தரை தளம் மற்றும் நான்கு தளங்களுடன் 20 வகுப்பறைகள், முதல்வா் அறை, ஆசிரியா்கள் அறை, அலுவலகம், ஆய்வகங்கள், கணினி அறை, கருத்தரங்கு கூடங்கள், நூலகம், உணவகம், கழிவறைகள், வாகன நிறுத்துமிடம் ஆகிய வசதிகளுடன் கட்டப்படவுள்ளது. இரண்டாம் கட்டத்தில் 24 வகுப்பறைகள், ஆசிரியா்கள்அறை, கருத்தரங்கு கூடம், ஆய்வகங்கள் மற்றும் கழிவுறை வசதிகளுடன் அமையவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT