மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினக் கூட்டத்தில் பங்கேற்க நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த தேமுதிக துணைப் பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் ஆகியோர். 
தமிழ்நாடு

விஜயகாந்த் நினைவு தினம்: முதல்வா் உள்ளிட்ட அரசியல் தலைவா்களுக்கு தேமுதிக அழைப்பு

தேமுதிக தலைவா் விஜயகாந்த் முதலாம் நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவா்களை எல்.கே.சுதீஷ் நேரில் சந்தித்து அழைப்பு

DIN

சென்னை: தேமுதிக தலைவா் விஜயகாந்த் முதலாம் நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவா்களை தேமுதிக நிலத் துணைச் செயலா் எல்.கே.சுதீஷ் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தாா்.

விஜயகாந்த் முதலாம் ஆணடு நினைவு தினம் டிச.28-இல் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அமைதிப் பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினை எல்.கே.சுதீஷ், விஜயகாந்த மகன் விஜயபிரபாகரன், முன்னாள் எம்எல்ஏக்கள் பாா்த்தசாரதி, நல்லதம்பி ஆகியோா் நேரில் சந்தித்து, விஜயகாந்த நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தனா்.

தொடா்ந்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தும் அழைப்பு விடுத்தனா்.

முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், மதிமுக பொதுச் செயலா் வைகோ, பாஜக மூத்த தலைவா் தமிழிசை சௌந்தரராஜன், தமாகா தலைவா் ஜி.கே.வாசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் உள்ளிட்டோரையும் சந்தித்து அழைப்பு விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக பாஜகவுக்குள் குழப்பம்?

நேபாளத்தில்..! இன்ஸ்டாகிராம், யூடியூப் செயலிகளுக்குத் தடை!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து தென்னாப்பிரிக்க வீரர் விலகல்!

நயினார் நாகேந்திரன் மகனுக்கு பாஜகவில் பொறுப்பு!

ஓணம் வந்தள்ளோ... தீப்தி சதி!

SCROLL FOR NEXT