தமிழ்நாடு

பொதுவுடைமை இயக்க நூற்றாண்டு: டிச. 26-ல் என்சிபிஎச் சார்பில் 100 இடங்களில் புத்தகக் கண்காட்சி!

நூறு இடங்களில் புத்தகக் கண்காட்சி நடைபெறுவது தொடர்பாக...

DIN

பொதுவுடைமை இயக்கம் நூற்றாண்டுத் தொடக்கத்தையொட்டி, டிச. 26 அன்று நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (என்.சி.பி.எச்.) சார்பில் புத்தகக் கண்காட்சி நடைபெறவுள்ளது.

தமிழகம் முழுவதும் முக்கியமான நூறு நகரங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த புத்தகக் கண்காட்சியில், விற்கப்படும் நூல்களுக்கு டிச. 26 ஒரு நாள் மட்டும் விலையில் 20 சதவிகிதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

கலை, இலக்கியம், அரசியல், அறிவியல், வரலாறு, தொழில்நுட்பம், பெண்ணியம், தலித்தியம், மார்க்சியம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வகைமைகளில் இதுவரை 10,000 தலைப்புகளுக்கு மேல் புத்தகங்களை என்சிபிஎச் வெளியிட்டுள்ளது.

ரூ. 10 முதல் ரூ. 30 வரையிலான விலையில் சிறு நூல்களும் விற்கப்படுகின்றன.

கவிஞர் தமிழ்ஒளியின் ஒட்டுமொத்தப் படைப்புகளும் ஆறு தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு விரைவில் முன்வெளியீட்டுத் திட்டத்தில் வெளியிடப்படவுள்ளதாக மேலாண்மை இயக்குநர் க. சந்தானம் தெரிவித்துள்ளார்.

பொதுவுடைமை இயக்க நூற்றாண்டையொட்டி, தமிழகமெங்கும் 100 இடங்களில் டிச. 26 அன்று புத்தகக் கண்காட்சியை என்சிபிஎச் நடத்தவுள்ளது.

சென்னையில் கே.கே. நகர், அசோக் நகர் நூலகம், அசோக் நகர் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம், பாலன் இல்லம், அயப்பாக்கம், திருமங்கலம், கோயம்பேடு, தண்டையார்பேட்டை மெட்ரோ, வடசென்னை கவுன்சிலர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது.

மேலும், மதுரை, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கிருஷ்ணகிரி, சேலம், வேலூர், கோவை, திருப்பூர், உதகை, ஈரோடு ஆகிய மாவட்டங்களின் முக்கிய இடங்களில் புத்தகக் கண்காட்சி நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு: ஒருவா் கைது

புதிய வாசககா்களை ஈா்த்துள்ள ஈரோடு புத்தகத் திருவிழா

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் முன்னாள் அமைச்சா்கள் வேலுமணி சுவாமி தரிசனம்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மகளிா் உரிமைத் தொகை விண்ணப்பப் பதிவில் சிக்கல்

SCROLL FOR NEXT