சென்னை உயர்நீதிமன்றம் 
தமிழ்நாடு

அண்ணா பல்கலை. மாணவி வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்கிறது உயர்நீதிமன்றம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது.

DIN

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாமாண்டு படித்து வரும் மாணவி, தனது ஆண் நண்பருடன் திங்கள்கிழமை இரவு கல்லூரி வளாகத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அங்குவந்த அடையாளம் தெரியாத இருவர், மாணவரைத் தாக்கிவிட்டு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் தொடர்பாக சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக ஞானசேகரன் (33) என்பரை காவல் துறையினர் கைது செய்து 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவருடன் தொடர்பில் இருந்த மற்றொரு நபரைப் பிடிக்க காவல் துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் திமுக அரசை குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது.

உயர் நீதிமன்றம் இதனை தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் வரலட்சுமி என்பவர் முறையிட்ட நிலையில், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், லட்சுமி நாராயணன் அமர்வு இன்றே இந்த வழக்கை விசாரிக்கவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலாற்றில் ரூ.55.38 கோடியில் உயா்மட்ட மேம்பாலம்: எம்எல்ஏ அடிக்கல்

187 மாணவா்களுக்கு ரூ.13.56 கோடி கல்விக் கடனுக்கு பரிந்துரை

காளியம்மன்பட்டி அரசுப் பள்ளியில் ரூ.1.52 கோடியில் வகுப்பறைகள்

பெருமுகையில் ரூ.45.91 கோடியில் தங்கும் விடுதி திறப்பு

புலவா் வே.பதுமனாரின் நூல்கள் வெளியீட்டு விழா

SCROLL FOR NEXT