மு.க. ஸ்டாலின் 
தமிழ்நாடு

வள்ளுவர் சிலையைக் காண 3 புதிய படகுகள்: மு.க. ஸ்டாலின்

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் தோரணவாயிலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

DIN

திருவள்ளுவர் சிலையைக் காண்பதற்காக 3 சுற்றுலா படகுகள் வாங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு வள்ளுவர் தோரணவாயிலுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

அதனைத் தொடர்ந்து வெள்ளி விழா மலரை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். இதனை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் பெற்றுக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது,

திருவள்ளுவர் சிலையை பொதுமக்கள் காணம் வகையில் 3 சுற்றுலா படகுகள் வாங்கப்படும். படகுகளுக்கு காமராஜர், மார்ஷல் நேசமணி, ஜி.யூ. போப் பெயர்கள் சூட்டப்படும்.

தனியார் நிறுவனங்களில் திருக்குறள் எழுதிவைக்க ஊக்குவிக்கப்படும். வாளும் கேடயமும் நம்மை காக்கும், நம்மை அழிக்க வரும் தீமைகளைத் தடுக்கும்.

கன்னியாகுமரி பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும். அறத்துப்பால் அதிகாரங்களை குறிக்கும் வகையில் வள்ளுவர் சிலையின் பீடம் 38 அடி. மீதமுள்ள 95 அதிகாரங்களை பிரதிபலிக்கும் வகையில் சிலை உயரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒரு சிலை அமைத்ததற்கு வெள்ளி விழாவா? என அதிமேதாவிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

7 ஆயிரம் டன் எடை கொண்ட வள்ளுவர் சிலையை பாறையில் தூக்கி நிற்கவைத்ததே பெருமைதான். திருக்குறள் தமிழர்களின் பண்பாட்டு அடையாளம் என்பதால் அவரைக் கொண்டாடுவோம் எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடி புனித நீராட செயற்கை யமுனை! கட்சிகள் விமர்சனம்

ராகுல் என்னை அண்ணன் என்றுதான் அழைப்பார்! முதல்வர் ஸ்டாலின்

ஓஹோ மேகம் வந்ததோ... தீபா பாலு!

ஜார்க்கண்டில் நிலக்கரி சுரங்க சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி, 2 பேர் காயம்

இது புதுவகை மோசடி! ரூ. 50 லட்சம் இழந்த இன்ஃப்ளுயன்சர்! எப்படி நடந்தது?

SCROLL FOR NEXT