தமிழ்நாடு

ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாக ரூ. 1.8 லட்சம் மோசடி!

DIN

ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாக பயணியிடம் ரூ. 1.8 லட்சம் மோசடி செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வடபழனியை சேர்ந்த ஸ்ரீதரன்(51) என்பவர் ரயில்வேவின் அதிகாரப்பூர்வ இணையதளமான ஐஆர்சிடிசி-யில் முன்பதிவு பயணச்சீட்டை ரத்து செய்துள்ளார்.

தொடர்ந்து, இணையதளத்தில் பதிவிடப்பட்டிருந்த 9832603458 என்ற உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பயணச்சீட்டு கட்டணத்தை ஸ்ரீதரன் திரும்பக் கேட்டுள்ளார். அப்போது வங்கிக் கணக்கு விவரங்கள் அளித்த சில நிமிடங்களிலேயே ரூ.1.8 லட்சம் பணத்தை எடுத்துள்ளனர்.

இதனையடுத்து, உடனடியாக திநகர் காவல் துணை ஆணையரிடம் உடனடியாக ஸ்ரீதரன் புகார் அளித்துள்ளார்.

முதல்கட்ட விசாரணையில், ஐஆர்சிடிசி இணையதளத்தில் பதிவிடப்பட்டிருந்த உதவி எண், ரயில்வே நிர்வாகத்தால் பதிவிடப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.

தொடர்ந்து, ஐஆர்சிடிசி இணையதளம் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து சென்னை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 20,000-க்கு மேல் ரொக்கமாக கடன் வழங்கக்கூடாது: ஆர்பிஐ உத்தரவு

தொடர் தோல்விகள் குறித்து சஞ்சு சாம்சன் விளக்கம்!

மோடியின் பேச்சு பொய்யானது, மூர்க்கத்தனமானது: ப. சிதம்பரம் சாடல்

மீண்டும் இணைந்த அயோத்தி கூட்டணி!

பாஜக வெற்றி பெற்றால் 2025 முதல் அமித் ஷாவே பிரதமர்: கேஜரிவால்

SCROLL FOR NEXT