மாநகராட்சி, நகராட்சியில் 1,933 காலிப்பணியிடங்கள்: விண்ணப்பிப்பது எப்படி?
தமிழக நகராட்சி, மாநகராட்சிகளில் காலியாக உள்ள 1,933 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழக நகராட்சி, மாநகராட்சிகளில் காலியாக உள்ள 1,933 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள்), தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பத்தாரர்கள் பிப்.9 முதல் மார்ச்.12 வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: பொது சிவில் சட்டத்தின் மீதான விவாதம் எப்போது?
உதவியாளர், உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர் உள்ளிட்ட பதவிகளில் 1,933 காலியிடங்களுக்கு www.tnmaws.ucanapply.com என்ற வலைதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.