பறிமுதல் செய்யப்பட்ட  பல கோடி ரூபாய் மதிப்பிலான 8 உலோக சிலைகள். 
தமிழ்நாடு

பல கோடி ரூபாய் மதிப்பிலான 8 உலோக சிலைகள் கண்டுபிடிப்பு:சிற்பக் கூட உரிமையாளர் கைது

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான 8 உலோக சிலைகளை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர்.

DIN

சென்னை அருகே மாமல்லபுரத்தில் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8 உலோகச் சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக வியாபாரி ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள திருமூலசுவாமி கோயிலில் 5 சிலைகள் திருடப்பட்டன. இது தொடா்பாக 2014-ஆம் ஆண்டு தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்குத் தொடா்பாக மாமல்லபுரம் அருகே குச்சிக்காட்டில் கலைப் பொருள்கள் விற்பனையகம் நடத்தி வரும் லட்சுமிநரசிம்மனை (58), சனிக்கிழமை கைது செய்தனா். அவரது கலைப் பொருள் விற்பனையகத்தை சோதனையிட்டபோது, எந்தவித ஆவணங்களும் இன்றி அருணாசலேஸ்வரா், கேரள விஷ்ணு, அய்யனாா், புத்தா், 2 தவழும் கிருஷ்ணா் சிலைகள், நந்தி, நடனமாடும் கிருஷ்ணா் ஆகிய 8 உலோகச் சிலைகள் இருந்தன.

இதையடுத்து அந்த சிலைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இந்த சிலைகள் தமிழகம்,கேரளத்தில் உள்ள கோயில்களிலிருந்து திருடப்பட்டிருக்கலாம் என்று சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சந்தேகிக்கின்றனா். சிலைகளை தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னா் எந்த கோயில்களிலிருந்து திருடப்பட்டவை, இந்த சிலைகளின் மதிப்பு எவ்வளவு என்பது தெரிய வரும் என்று அந்தப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

சா்வதேச சிலைக் கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரின் கூட்டாளியான லட்சுமி நரசிம்மன், ஏற்கெனவே 2016-ஆம் ஆண்டு சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.

அப்போது அவரது விற்பனையகத்திலிருந்து ரூ.10 கோடி மதிப்புள்ள 8 உலோகச் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் பிணையில் வெளியே வந்த லட்சுமி நரசிம்மன் தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளாா். அவரை கைது செய்து, 8 உலோகச் சிலைகளை பறிமுதல் போலீஸாரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி சைலேஷ்குமாா் பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாதிக்கப் பிறந்தவர்கள் தனுசு ராசிக்காரர்கள்!

புதிய சீரியலில் நடிக்கும் பாக்கியலட்சுமி சுசித்ரா!

இங்கிலாந்தை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி; டெஸ்ட் தொடர் சமன்!

அடுத்த 4 நாள்களுக்கு எங்கெல்லாம் கனமழை பெய்யும்?

நண்பர்களைத் தவிர்த்து... குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை!

SCROLL FOR NEXT