விமானியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் 
தமிழ்நாடு

ராஜராஜனால் கட்டப்பட்ட செம்பரம்பாக்கம்.. விமானத்தில் ஒலித்த குரல்: சு. வெங்கடேசன் பதிவு

ராஜராஜனால் கட்டப்பட்ட செம்பரம்பாக்கம் என்று தமிழில் ஒலித்த குரல் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

DIN


உள்நாட்டு விமானத்தில் பயணம் செய்தபோது, ராஜராஜனால் கட்டப்பட்ட செம்பரம்பாக்கம் என்று தமிழில் ஒலித்த குரல் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில்,  உள்நாட்டு விமானத்தில் அவ்வப்பொழுது தமிழ் மொழியில் அறிவிப்பு செய்யப்படுவதைக் கேட்க முடியும். நேற்று மதுரையில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் விமானியின் அறிவிப்பு வியப்பை உருவாக்கியது.

“இடது பக்கம் இருக்கும் பயணிகளின் பார்வைக்கு தெரிவது முதலாம் இராஜராஜனால் கட்டப்பட்ட செம்பரம்பாக்கம் ஏரி” என்று ஒலித்தது அந்தக்குரல்.

காற்றின் வேகத்தை, வெயிலின் அளவைத்தான் விமானிகள் சொல்வார்கள் ஆனால் ஏரியின் வரலாற்றை வானிலே ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார்.

அந்த குரலுக்கு சொந்தக்காரரான விமானி வெங்கடேசை அழைத்து வாழ்த்துச்சொன்னேன். வேள்பாரி வாசகர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவுடன் அவர் விமானி வெங்கடேசுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

ஆா்.எஸ். மங்கலம் பட்டியலின மக்களுக்கு வழங்கிய நிலத்தை அபகரிப்பதைக் கண்டித்து மறியல்

ஏற்றுமதியாளா்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை

தமிழ் வளா்ச்சித் துறை போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு

கானாடுகாத்தான் பகுதியில் நவ.7-இல் மின் தடை

SCROLL FOR NEXT