தமிழ்நாட்டுக்கு கடந்த 10 ஆண்டுகளில் ரூ. 10 லட்சம் கோடி மத்திய அரசு நிதி வழங்கியுள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் தமிழகத்துக்குப் புயல் வெள்ள நிவாரண நிதி உதவி மற்றும் வளா்ச்சித் திட்டங்களுக்கு உரிய நிதியை ஒதுக்கீடு செய்யாததை கண்டித்து திமுக தலைமையில் தமிழக எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை கருப்புச் சட்டை அணிந்து போராட்டம் நடத்தினர்.
திமுகவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து செய்தியாளர்களிடம் எல்.முருகன் பேசியது:
“திமுக எப்போதும் பழிபோடும் விளையாட்டை விளையாடுகிறது. கடந்த 10 ஆண்டுகளில், தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் சமூக நலத்திட்ட பணிகளுக்காக ரூ. 10 லட்சம் கோடி பிரதமர் நரேந்திர மோடி கொடுத்துள்ளார்.
பல்வேறு பிரச்னைகளை திசை திருப்புவதற்காக திமுக இதுபோன்ற அரசியலை செய்கிறது. தமிழ்நாட்டு மக்கள் அவர்களுக்கு எதிராக உள்ளனர்.” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.