வைரக் கற்கள் 
தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் ரூ.2.33 கோடி மதிப்புள்ள வைரக் கற்கள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் தாய்லாந்துக்கு கடத்த இருந்த ரூ.2.33 கோடி மதிப்புள்ள வைரக் கற்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

DIN



சென்னை: சென்னை விமான நிலையத்தில் தாய்லாந்துக்கு கடத்த இருந்த ரூ.2.33 கோடி மதிப்புள்ள வைரக் கற்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சென்னையைச் சேர்ந்த பயணி ஒருவர் கொண்டு வந்த சூட்கேசில் வைரக் கற்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் இதுதொடர்பாக அந்த வாலிபரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட வைரக் கற்களின் மதிப்பு ரூ.2.33 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தடைசெய்யப்பட்ட ‘துரந்தர்’ பட பாடலுடன் என்ட்ரி.. சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான் அதிபர் மகன்!

துல்கர் படத்தில் இணைந்த கயாது லோஹர்!

வினா - விடை வங்கி... முந்தைய ஆண்டு வினாக்கள்! - 9

இந்திய அணியில் விளையாடிய பாகிஸ்தான் கபடி வீரர் மீது நடவடிக்கை!

ஆஷஸ் தொடர் : இங்கிலாந்து வீரர்களை விட அதிக ரன்கள் குவித்த மிட்செல் ஸ்டார்க்!

SCROLL FOR NEXT