சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி உடல் சென்னைக்கு இன்று (பிப். 13) பிற்பகல் கொண்டுவரப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வெற்றி துரைசாமியின் உடல் இன்று மாலை 5 மணிக்கு சென்னை சிஐடி நகரில் உள்ள இல்லத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
அதன்பிறகு மாலை 6 மணிக்கு கண்ணம்மாபேட்டை தியாகராய நகர் மயான பூமியில் தகனம் செய்யப்படவுள்ளது.
ஹிமாசலப் பிரதேச மாநிலம் கஷாங் நாலா அருகே கடந்த வாரம் (பிப். 4) ஞாயிற்றுக்கிழமை, சட்லஜ் நதியில் கார் கவிழ்ந்த விபத்தில் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி சிக்கினார்.
அவரின் கார் ஓட்டுநர் தன்ஜின் விபத்தில் உயிரிழந்தார். வெற்றி துரைசாமியுடன் சென்ற நண்பர் கோபிநாத் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், வெற்றி துரைசாமியின் உடலைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
ஒரு வாரத்துக்கும் மேலாக அவரைத் தேடும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், விபத்து நடந்த பகுதியில் இருந்த ரத்த கறை, திசுக்களை சேகரித்த போலீஸாா், அதை டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பியிருந்தனர்.
இதனிடையே விபத்து நடந்த இடத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் வெற்றி துரைசாமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து வெற்றியின் உடல் ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் சென்னை கொண்டு வரப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.