கோவை குண்டுவெடிப்பு தினம்: துப்பாக்கி ஏந்தி போலீஸார் பாதுகாப்பு!
கோவை குண்டு வெடிப்பு 26வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நகரில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கோவையில் கடந்த 1998ம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதன் 26வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகின்றது.
அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் தடுக்கும் விதமாக கோவை நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் 1800-க்கும் மேற்பட்ட போலீசார் நகரின் முக்கிய இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வெடிகுண்டு செயலிழக்க வைக்கும் 8 குழுக்கள் நகரின் முக்கிய இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.