தமிழ்நாடு

முதல்வர் தலைமையில் செயற்கை நுண்ணறிவு இயக்கம்: பட்ஜெட்டில் அறிவிப்பு

தமிழ்நாட்டில் அதிநவீன தொழில்நுட்ப புரட்சி: செயற்கை நுண்ணறிவு இயக்கம் அறிமுகம்

DIN

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம் உருவாக்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஆற்றிய பட்ஜெட் உரையில், உலக அளவில் அண்மைக்காலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள புதிய தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவு குறித்தும், அது தமிழ்ச் சமூகத்தின் பல்வேறு தரப்பினுலம் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்தும் இந்த அரசு கவனமுடன் ஆய்வு செய்து வருகிறது.

கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்துறை, ஆராய்ச்சி மற்றும் மருத்துவத் துறைகளில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதன் வாய்ப்புகள் குறித்த ஆக்கபூர்வமான வழிகாட்டுதல்களையும், இப்புதிய தொழில்நுட்பத்தின் பயன்பாட்டினை வழிநடத்திடத் தேவைப்படும் வரையறைகளைத் தெளிவாக வகுத்திடவும், முதல்வர் தலைமையில் தமிழ்நாடு செயற்கை நுண்ணறவு இயக்கம் ஒன்று ஏற்படுத்தப்படும்.

தமிழ்நாட்டில் தலைசிறந்த கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள், மின்னணு தொழில் நிறுவனங்கனின் நிர்வாகிகள் மற்றும் துறை வல்லுநர்கள் இந்த அமைப்பில் இடம் பெற்றிருப்பர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது!

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT