மு.க. ஸ்டாலின் (கோப்புப் படம்)
தமிழ்நாடு

அடுத்த 100 நாள்கள் மிக முக்கியமானவை: மு.க. ஸ்டாலின்!

கடமையுணர்வோடு ஓய்வின்றி உழைப்போம்; இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்வோம்

DIN

மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியை வெற்றிபெறச் செய்வோம் என முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக சமூக வலைதளப் பக்கத்தில் (எக்ஸ்) முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், நாற்பதும் நமதே! நாடும் நமதே! என்பதை உறுதிசெய்யும் விதமாக மிக எழுச்சியோடு பிரமாண்டமாகத் தமிழ்நாடெங்கும் நடந்தேறியுள்ளன ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ பொதுக்கூட்டங்கள்!

வெற்றிகரமாக இந்தக் கூட்டங்களை ஒருங்கிணைத்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் – கழக முன்னணியினர் என அனைவர்க்கும் பாராட்டுகள்! நன்றி!

நடப்பாண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றியை நோக்கிய நம் பயணத்தில் அடுத்த நூறு நாட்களும் மிக முக்கியமானவை. கடமையுணர்வோடு ஓய்வின்றி உழைப்போம்; இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்வோம் எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்பிஐ வங்கியில் வேலை: 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

திமுகவுக்கு கண்டனம், கூட்டணி அதிகாரம், தேர்தலில் போட்டி - தவெக தீர்மானங்கள்!

ஓடிடியில் பேட் கேர்ள்!

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

SCROLL FOR NEXT