இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்க நிதி!
வறண்ட நிலங்களில் தோட்டக்கலையை மேம்படுத்த ரூ.3.64 கோடி ஒதுக்கீடு.
பட்டதாரி இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்க 100 இளைஞர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றும் இதற்காக ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2024-25ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேரவையில் இன்று (பிப். 20) தாக்கல் செய்து வருகிறார்.
இதில், இளைஞர்களை வேளாண் தொழிலில் ஈடுபடுத்துவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டார். இளைய தலைமுறையினரை வேளாண் தொழிலில் நாட்டம் கொள்ளச் செய்வதற்காக நடவடிக்கைகளையும் எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.
Advertisement
Advertisement
வேளாண் பட்ஜெட்டில், சிறந்த விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதி திராவிடர் பழங்குடி விவசாயிகளுக்கு ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர், செய்யாறு, வேலூர், சேலம் உள்ளிட்ட சர்க்கரை ஆலைகளை தானியங்கி மையமாக்க ரூ.3.6 கோடி நிதி ஒதுக்கீடு.
வறண்ட நிலங்களில் தோட்டக்கலையை மேம்படுத்த ரூ.3.64 கோடி ஒதுக்கீடு.
பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சர்க்கரை ஆலைகளை மேம்படுத்த ரூ.12.4 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.