புல்லூா் தடுப்பணை (கோப்புப் படம்). 
தமிழ்நாடு

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை: நாளை அடிக்கல் நாட்டுகிறார் ஜெகன்மோகன் ரெட்டி!

பாலற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்காக திங்கள்கிழமை (பிப்.25) ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அடிக்கல் நாட்டுகிறார்.

DIN

பாலற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்காக திங்கள்கிழமை (பிப்.25) ஆந்திர் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அடிக்கல் நாட்டுகிறார்.

இதுகுறித்து ஆந்திர மாநில சுற்றுச்சூழல் மற்றும் கனிம வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரா ரெட்டி செய்தியாளர்களிடம் பேசியதாவது:

பாலாறு அணை தொடர்பான தமிழ்நாடு அரசின் வழக்கில் பிரச்னை தீர்ந்தது.

நாளை ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அடிக்கல் நாட்டுகிறார்.

தேர்தலுக்குப் பின் பாலாற்றில் மேலும் 2 தடுப்பணைகள் கட்டப்படும் என அவர் தெரிவித்தார்.

ஆந்திர மாநிலம் பாலாற்றின் குறுக்கே ஏற்கனவே 22 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளதால் வட மாவட்டங்களில் பாயும் பாலாறு தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது.

இந்த நிலையில், மேலும் ஒரு தடுப்பணையை கட்டுவதற்காக ஆந்திர அரசு நாளை அடிக்கல் நாட்டுவது தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாகை: 7 மாதங்களில் ரூ.1.84 கோடி ரேஷன் பொருள்கள் பறிமுதல்

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

மீஞ்சூரில் ஆக.6-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்: 3 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதி

மக்காவ் ஓபன்: லக்ஷயா, மன்னொ்பள்ளி தோல்வி

SCROLL FOR NEXT