முகப்பு
தமிழ்நாடு

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டுகோள்!

தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பி.எட். பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On : 27 பிப்ரவரி, 2024 at 3:50 PM
பகிர்:

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கேட்டுக்கொண்டுள்ளார்.

இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கு அனுமதிக்க வலியுறுத்தி தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பி.எட். பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பி.எட் படிப்பையும் இடைநிலை ஆசிரியர் பணிக்கு தகுதியாக அறிவிக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர் தேர்வு எழுத தகுதித்தேர்வு தாள் 1-ல் தேர்ச்சி பெற்ற பி.எட் பட்டதாரிகளை அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகிறது.

இதனிடையே, மாணவர் நலனை கருத்தில் கொண்டு இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பள்ளிக்குத் திரும்ப வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கோரியுள்ளார்.

3 நபர் குழு 3 சுற்றுகளாக ஆசிரியர் சங்கங்களிடம் கருத்து கேட்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →